சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். #Cook
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரர் அலய்ஸ்டர் குக் ஓய்வு
Published on

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்டுடன் ஓய்வு பெறுவதாக குக் அறிவித்துள்ளார்.

33-வயதான குக், 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 56 அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல், 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குக், 5 சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகவும் திகழந்து வந்த குக், கடந்த 2016 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

சமீப காலமாக பார்ம் இன்றி தவித்து வரும் குக், இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி வருகிறார். இதனால், அணியில் குக்கின் இடம் கேள்விக்குள்ளான நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com