ஒரு கேப்டனாக மிகவும் மகிழ்கிறேன்: கேஷவ் மகாராஜ் நெகிழ்ச்சி

தென் ஆப்பிரிக்கா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.
ஒரு கேப்டனாக மிகவும் மகிழ்கிறேன்: கேஷவ் மகாராஜ் நெகிழ்ச்சி
Published on

சென்னை,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து அணி 2 போட்டிகளிலும் , தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் கானர் எஸ்டர்ஹூய்ஸ் 75 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.

பின்னர் தென் ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மகாராஜ் கூறுகையில், 'இளம் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை புரிந்து கொள்வதற்கு அரு மையான வாய்ப்பாக இந்த தொடர் அமைந்தது. இவர்களிடம் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், வெற்றி வேட்கையும் இருப்பதை கண்டோம். இது எங்களது அணியின் கட்டமைப்பில் உள்ள ஆழத்தையும், இளம் வீரர்கள் எந்த அளவுக்கு தங்களை முன்னிறுத்தி திறமையை வெளிப்ப டுத்துகிறார்கள் என்பதையும் காட்டுகிறது. 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில், அவர்கள் கடைசி இரு ஆட்டத்திலும் சிறந்த பேட் டிங்கை வெளிப்படுத்தி அணியை மீட்டெடுத்ததை பார்க்கும் போது ஒரு கேப்டனாக மிகவும் மகிழ்கிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com