பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்

ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 34 வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் , இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின .
பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா கேப்டன் மோர்கனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்
Published on

அபுதாபி

ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 34 வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் , இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின .

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் . இதனால் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்கள்

எடுத்தது. குயிண்டன் டிகாக் அதிகபட்சமாக 42 பந்தில் 55 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும் எடுத்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாச்தில் அபார வெற்றி பெற்றது.ராகுல் திரிபாதி 42 பந்தில் 74 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்) வெங்கடேஷ் ஐயர் 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி பந்து வீசஅதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் தலா ரூ.6 லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com