

துரதிர்ஷ்டவசமாக அது நோ-பால் ஆக கண்டம் தப்பிய பஹார் ஜமானை அதன் பிறகு 114 ரன்களில் தான் முடக்க முடிந்தது. தனது 4-வது ஒரு நாள் போட்டியில் ஆடிய பஹார் ஜமானுக்கு இது தான் முதல் சதமாகும்.
சாம்பியன்ஸ் கோப்பையில் சயீத் அன்வர், சோயிப் மாலிக் ஆகியோருக்கு பிறகு சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் தான். அதே சமயம் ஐ.சி.சி. தொடர் ஒன்றில் இறுதி ஆட்டத்தில் சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற அரிய சிறப்பையும் அவர் பெற்றார்.