வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை..ஐசிசி அதிரடி!

மார்லன் சாமுவேல்ஸ், 2012 மற்றும் 2016 ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பைகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக் தொடரில் விளையாடியபோது சாமுவேல்ஸ் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீது சுமத்திய குற்றசாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் விளையாட மார்லன் சாமுவேல்ஸ்க்கு 6 வருடங்கள் தடை விதிப்பதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது.  தடைக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 11 முதல் 2029ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com