ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Image Courtesy; @DelhiCapitals / @RishabhPant17
Image Courtesy; @DelhiCapitals / @RishabhPant17
Published on

மும்பை,

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு உடற்தகுதி பெற்று தற்போது ஐ.பி.எல் போட்டியில் களம் இறங்க இருக்கிறார்.

இந்த தொடரில் அவர் கேப்டனாக மட்டுமே செயல்படுவார் எனவும், விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியுடன், சிறப்பாக பேட்டிங் செய்தால் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இதுவரை ஐ.பி.எல்-லில் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன் என ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், கடினமான காலத்தை கடந்து வந்துள்ளார். மீண்டும் அவரை களத்தில் பார்க்க இருப்பது சிறப்பானது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்வார்.

ஆகவே, அவரது எண்ணம் விளையாட்டில் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். தன்னை வலுக்கட்டாயமாக மீண்டும் பழைய விளையாட்டுக்கு இழுத்துச் செல்வார் என நினைக்கிறேன். அவர் சூப்பர் ஸ்டார். அவர் விளையாடிய வகையில் மிடில் ஆர்டரில் யாரும் விளையாட முடியாது.

அவர் ஆக்ரோசமாக விளையாடுபவர். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். இவ்வாறு அவர் கூறினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com