‘பீல்டிங்கில் சொதப்பியதால் தோல்வி’- மோர்கன்

பீல்டிங்கில் சொதப்பியதால் தோல்வியடைந்ததாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.
‘பீல்டிங்கில் சொதப்பியதால் தோல்வி’- மோர்கன்
Published on

நாட்டிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 349 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (107 ரன்), ஜோஸ் பட்லர் (103 ரன்) ஆகியோர் சதம் அடித்த போதிலும் பலன் இல்லை. இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 334 ரன்களே எடுக்க முடிந்தது.

தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், மிகவும் நெருக்கமான ஆட்டத்தில் தவறான முடிவை சந்திக்க நேர்ந்தது ஏமாற்றம் அளிக்கிறது. இலக்கை எட்ட முடியும் என்று தான் நினைத்தோம். ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் நின்றது வரை எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. பீல்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அது தான் இந்த போட்டியில் இரு அணிக்கும் உள்ள வித்தியாசம். இந்த வகையில் 15 முதல் 20 ரன்கள் வரை நாங்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com