பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் முன்னேற்றம்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் புதிய தரவரிசைப்பட்டியலில் தீப்தி ஷர்மா முன்னேறியுள்ளார்.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் முன்னேற்றம்
Published on

புதுடெல்லி:

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத்மூனி முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீராங்கனைகள் மந்தனா 4-வது இடத்திலும், ஷபாலி வர்மா 6-வது இடத்திலும் தொடருகின்றனர்.

இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 3 இடங்கள் அதிகரித்து 34-வது இடத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் 4 இடம் உயர்ந்து 75-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டென் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 5 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com