

பெங்களூரு,
ஐபிஎல் தொடரின் இன்றைய 34ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சாய் சதர்சன் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 58 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் மூலம் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக, சாய் சுதர்சன் இந்த ஐபிஎல்லில் சதம் அடித்ததன் மூலம், அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியின்போது சாய் சுதர்சன் ஐபிஎல் அரங்கில் தனது 2000 ரன்களைக் கடந்தார். வெறும் 47 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியதன் மூலம், கிறிஸ் கெய்ல் (48 இன்னிங்ஸ்) வைத்திருந்த உலக சாதனையை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்தார்.
மேலும், இந்திய அளவில் 1,361 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி, அபிஷேக் சர்மா, வீரேந்திர ஷேவாக் போன்ற ஜாம்பவான்கள் வரிசையிலும் இணைந்தார். மேலும் குஜராத் அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் சாய், 3 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அவர் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக அடித்துள்ளார். இந்த 3 சதங்களும் 2024, 25, 26 ஆகிய ஆண்டுகளில் வந்தது. முதல் இடத்தில் 4 சதங்களுடன் சுப்மன் கில் உள்ளார்.