ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா 332 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா 332 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on

தர்மசலா,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார். அதன் பிறகு முதல் நாளில் எஞ்சியிருந்த ஒரு ஓவரை ஆடிய இந்திய அணி ரன் எதுவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்திய அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் (ரன்ரேட் 2.72) எடுத்துள்ளது. விருத்திமான் சஹா 10 ரன்னுடனும் (43 பந்து), ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் (23 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இன்றைய 3-வது நாள் ஆட்டம் துவங்கியதும் ஜடேஜா அதிரடி காட்டினார். ஓரளவு தாக்கு பிடித்த சஹா 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய ஜடேஜாவும் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 118.1 ஓவர்கள் முடிவில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com