

பெங்களூரு,
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, தொடக்கத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 92 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். அவரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் குவித்தது.
முதல்நாள் ஆட்டம் முடிந்தபிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. இதனால், கிரீசை விட்டு இறங்கி விளையாட முடிவுசெய்தேன். 92 (98 பந்து 10 பவுண்டரி 4 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டதில் எனக்கு வருத்தம் இல்லை. அரைசதம் கடந்ததே சதம் அடித்ததை போல உணர்ந்தேன். எனவே அதனை கொண்டாடினேன். என்னுடைய ஆட்டம் அணிக்கு சாதகமாக அமைந்தது. இவ்வாறு ஸ்ரேயஸ் அய்யர் கூறினார்.