

ஹராரே,
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட் டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஹராரே யில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக அசோக் ஷர்மாவுக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்குர் சேர்க்கப்பட்டார். அவர் இந்தியாவின் 124-வது சர்வதேச 20 ஓவர் போட்டி வீரர் ஆவார். 'டாஸ்' ஜெயித்த ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தனது கேப்டன்ஷிப்பில் முதல் 8 ஆட்டங்களில் டாஸில் ஜெயித்திருந்த ஸ்ரேயாஸ் அய்யரின் 'டாஸ் ராசி' முடிவுக்கு வந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 219 ரன் கள் குவித்தது. இந்த மைதானத்தில் இந்தியாவின் 2-வது சிறந்த ஸ்கோர் இதுவாகும். தனது 9-வது அரைசதத்தை நிறைவு செய்த திலக் வர்மா 60 ரன்களுடன் (29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.
பின்னர், இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியாவின் 2-வது பெரிய வெற்றி இதுவாகும். இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந் தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடக்க ஆட்டத்தில் 7 விக் கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று இருந்தது.
இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அதே ஹராரேயில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. இந் தியா தொடரை வசப்படுத்தி விட்டதால் இதுவரை ஆடாத பிரப்சிம்ரன் சிங், ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யுனைட்/ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.