இங்கிலாந்து வீரர் பட்லருக்கு விரலில் எலும்பு முறிவு

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு பந்து தாக்கியதில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர் பட்லருக்கு விரலில் எலும்பு முறிவு
Published on

லண்டன்,

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், 2-வது நாள் ஆட்டத்தின் போது பந்து தாக்கியதில் காயமடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வலியை தாங்கி கொண்டு தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் காயம் மோசமாக இருப்பதால் அவர் உடனடியாக தாயகம் திரும்ப இருப்பதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார்.

ஏற்கனவே ஜானி பேர்ஸ்டோவும் காயத்தால் அவதிப்படுவதால், கடைசி டெஸ்டில் சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com