டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன்... ஹாரி புரூக் சாதனை

டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த 3-வது இங்கிலாந்து வீரராக புரூக் உள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன்... ஹாரி புரூக் சாதனை
Published on

கொழும்பு

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேற்று விளையாடின.

இதில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவர் 50 பந்துகளில் சதம் பூர்த்தி செய்துள்ளார். இதில், 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களும் அடங்கும்.

Also Read
உள்கட்டமைப்பு பணிகளுக்கு 2024-ம் ஆண்டு முதல் ரூ.13 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு
டி20 உலகக்கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன்... ஹாரி புரூக் சாதனை

இதனால் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 என அனைத்து 3 வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த 3-வது இங்கிலாந்து வீரராக புரூக் உள்ளார். அந்த வகையில், ஜோஸ் பட்லர், டேவிட் மலான் முறையே ஒன்றாம் மற்றும் இரண்டாம் 2 இடங்களை பிடித்துள்ளனர்.

இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. எனினும், இங்கிலாந்து அணி 19.1 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com