"ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் படமாகிறது சோயிப் அக்தரின் வாழ்க்கை வரலாறு

இந்த திரைப்படம் நவம்பர் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy : AFP/Twitter 
Image Courtesy : AFP/Twitter 
Published on

மும்பை,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 46 டெஸ்ட், 163 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 178, 247 மற்றும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரின் விக்கெட் வீழ்த்தும் திறனை விட இவர் வீசும் பந்தின் வேகத்தை கண்டு முன்னணி கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூட அஞ்சி உள்ளனர்.

குறிப்பாக 2002 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 161 கிலோ.மீ வேகத்தில் அக்தர் வீசிய பந்து தான் தற்போது வரை கிரிக்கெட்-யில் வீசப்பட்ட வேகமான பந்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவரின் வாழ்கை வரலாறு "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை முஹம்மது ஃபராஸ் கெய்சர் என்பவர் இயக்குகிறார்.

சோயிப் அக்தர் பாகிஸ்தானின் ராவல்பிண்டி என்ற இடத்தில் பிறந்ததாளும், அதிவேகமாக பந்துவீசியதாலும் இவருக்கு ஏற்கனவே "ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரால் அறியப்பட்டவர். இந்த நிலையில் அதே பெயரில் இவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது.

இது குறித்த அறிவிப்பை சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் "பர்ஸ்ட் லுக்-கை" பகிர்ந்துள்ள அவர் "பாகிஸ்தானைச் சேர்ந்த விளையாட்டு வீரரைப் பற்றிய முதல் வெளிநாட்டு படம்" என பதிவிட்டுள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 16, 2023 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com