இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்; இலங்கை 117/4 (25 ஓவர்)

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்; இலங்கை 117/4 (25 ஓவர்)
Published on

கொழும்பு,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2-ம்தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது.

இதன்படி இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்துவீச்சை தொடங்க உள்ளது.

இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா (32) மற்றும் மினோத் (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்பு ஆடிய பனுகா 24 ரன்களுக்கும், தனஞ்ஜெயா 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனால், இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள், சஹால் மற்றும் குருணல் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com