முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
Published on

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி, 48.3 ஓவர்களில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (58 ரன், 68 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (53 ரன், 84 பந்து, 3 பவுண்டரி), எடுத்தனர்.

பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் அலிசா ஹீலி (50 ரன்), விக்கெட் கீப்பர் பெத் மூனி (76 ரன், 79 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com