

ஹராரே,
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க வங்காளதேசம் முனைப்பு காட்டும், அதேவேளை வெற்றி பயணத்தை தொடர ஜிம்பாப்வே தீவிரம் காட்டும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.