முதல் ஒருநாள் போட்டி: வங்காளதேச அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
முதல் ஒருநாள் போட்டி: வங்காளதேச அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
Published on

டாக்கா,

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வங்கா ளதேசம் சென்றுள்ளது. நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் இடையி லான முதலாவது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் ஹென்ரி நிகோலஸ் 68 ரன்களும், டீன் போக்ஸ்கிராப்ட் 59 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச அணியில் டஸ்கின் அகமது , ஷோர்புல் இஸ்லாம் , ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com