முதல் ஒருநாள் போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

ரிக்கல்டன் மற்றும் டி காக் டக் அவுட் ஆகி ஏமாற்றினர்.
முதல் ஒருநாள் போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
Published on

ராஞ்சி,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ரிக்கல்டன் மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய குயிண்டன் டி காக் இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இருவரின் விக்கெட்டுகளையும் ஹர்ஷித் ராணா தனது முதல் ஓவரில் காலி செய்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ராமை 7 ரன்களில் அர்ஷ்தீப் சிங் காலி செய்தார். 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்க அணியை டோனி டி சோர்சி மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி சேர்ந்து காப்பாற்றி வருகின்றனர்.

தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் அடித்துள்ளது. டி சோர்சி 18 ரன்களுடனும், பிரீட்ஸ்கே 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com