முதல் தகுதி சுற்று : குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பட்லர் கூறியது என்ன ?

ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்
Image Courtesy : BCCI /IPL 
Image Courtesy : BCCI /IPL 
Published on

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார் .பின்னர் களமிறங்கிய குஜராத் 3 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய பட்லர் கூறியதாவது ;

"முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கு நாங்கள் ஆசைப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்; நாங்கள் இன்னும் தொடரில் இருக்கிறோம், இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் ஏமாற்றமடைந்தோம், ஆனால் நாங்கள் அதைத் தகர்ப்போம். நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம்"

"நான் இன்னிங்க்ஸை தொடங்குவது கடினமாக இருந்தது. பின்னர் சஞ்சு சாம்சன் வந்து அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்தார், எனவே அவரை சிறிது நேரம் ஸ்ட்ரைக் செய்ய முயற்ச்சித்தேன் இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி மற்றும் முதலில் பேட்டிங் செய்வது நாங்கள் நல்ல ஸ்கோரை பெற விரும்பினேன். இது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான இடம் .மிக வேகமான அவுட் பீல்ட் கொண்ட மிகச் சிறிய மைதானம்.. எப்பொழுதும் கொஞ்சம் பந்துவீச கடினமாகவும் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com