இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி... தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி... தென் ஆப்பிரிக்கா வெற்றி
Published on

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று டர்பனில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில், இந்திய மகளிர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஷபாலி வர்மா 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கம் தந்தார். அவருக்குப் பின் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் (36) மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (47* ரன்கள், 33 பந்துகள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15 ஓவர் முடிவில் 119/2 என வலுவாக இருந்த இந்தியா, கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 157/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் அயபோங்கா காக்கா மிகச்சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு, கேப்டன் லாரா வோல்வார்ட் (51) மற்றும் அன்னேரி டெர்க்சென் (44*) ஜோடி வெற்றியை தேடி தந்தது. 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

Also Read
கொல்கத்தா கேப்டனாக 'மோசமான' சாதனை... கம்பீர், மெக்கல்லம் வரிசையில் இணைந்த ரஹானே
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி... தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்திய பந்துவீச்சாளர்கள் 14 வைடுகளை வீசியது எதிரணிக்குச் சாதகமாக அமைந்தது. முக்கியமான நேரத்தில் கேட்சுகளைத் தவறவிட்டது மற்றும் மெதுவான ஓவர் ரேட் காரணமாக விதிக்கப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது.

அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இதே மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதில் இந்தியா தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com