முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்.. தமிழக வீரருக்கு இடம்


முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இர்பான் பதான்.. தமிழக வீரருக்கு இடம்
x

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

மும்பை,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே இந்த டி20 தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம் பெற போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான இர்பான் பதான் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரது அணியில் குல்தீப் யாதவுக்கு இடமளிக்காத அவர் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தியை தேர்வு செய்துள்ளார்.

இர்பான் பதான் தேர்வு செய்த பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

1 More update

Next Story