முதல் டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது

முதல் டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
Published on

லாகூர்,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 லாகூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி சைம் ஆயுப் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.சல்மான் ஆகா 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com