இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; இவர்கள் இருவரும் பிளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும் - ஹர்பஜன் சிங்


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; இவர்கள் இருவரும் பிளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும் - ஹர்பஜன் சிங்
x

image courtesy; twitter/@BCCI

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 20ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் மற்றும் விராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இந்த இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவி கிடைக்கும். இதன் காரணமாக இந்திய பிளேயிங் லெவனில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்பலாம். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போடியில் இந்திய பிளேயிங் லெவனில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இடம் பெற வேண்டும் என இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, லீட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். அவருடன் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும்.

ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் இவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு ஆடுகளத்திலும் இவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story