இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த முதல் போட்டிக்கு தயாராகும் இந்திய அணியினர் லீட்சில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com