இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
x

image courtesy:ICC

தினத்தந்தி 8 Jun 2025 2:09 PM IST (Updated: 8 Jun 2025 2:51 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை ஜஸ்பிரித் பும்ரா முன்னின்று வழிநடத்த உள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறினார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இத்தகைய சூழலுக்கு மத்தியில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி லார்ட்சில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளது. இது குறித்த வீடியோவை பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

1 More update

Next Story