இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகம்


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகம்
x

image courtesy:twitter/@BCCI

தினத்தந்தி 20 Jun 2025 3:16 PM IST (Updated: 20 Jun 2025 3:31 PM IST)
t-max-icont-min-icon

கருன் நாயருக்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

லீட்ஸ்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன 317-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார். அத்துடன் அவர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய உள்ளதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய முன்னணி வீரரான கருண் நாயருக்கும் 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்

1 More update

Next Story