முதல் டெஸ்ட்: முஷ்பிகுர் ரஹீம், சாண்டோ சதம்.. முதல் நாளில் வங்காளதேசம் 292 ரன்கள் குவிப்பு

image courtesy:twitter/@ICC
இலங்கை - வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
காலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரகள் ஆன ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்களிலும், அனாமுல் ஹக் டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த மொமினுல் ஹக் (29 ரன்கள்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ - முஷ்பிகுர் ரஹீம் கூட்டணி அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் குவித்துள்ளது. சாண்டோ 136 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் தரிந்து ரத்நாயக்கா 2 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.






