முதல் டெஸ்ட்: வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்கும் இலங்கை

வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

காலே,

இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்களும், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் அடித்து அசத்தினர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தாரிந்து ரத்னாயகே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை சிறப்பாக பேட்டிங் செய்து வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பதும் நிசங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலு சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன லஹிரு உதாரா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினேஷ் சண்டிமால் தனது பங்குக்கு 54 ரன்களும், மேத்யூஸ் 39 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த நிசங்கா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 187 ரன்களில் அவுட்டானார்.

3-ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் அடித்துள்ளது. கமிந்து மெண்டிஸ் 37 ரன்களுடனும், தனஞ்சய டி சில்வா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி இன்னும் 127 ரன்கள் பிந்தங்கி உள்ள நிலையில் நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com