Image Courtesy : @IPL
Image Courtesy : @IPL

காயத்தில் இருந்து மீண்டு மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ்..!

ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
Published on

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனையும், வழக்கம்போலவே தோல்வியுடன் தான் தொடங்கியது.

மும்பை அணி தனது அடுத்த போட்டியில் ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காமல் இருந்த அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு தனிமைப்படுத்துதலை முடித்துவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்

கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடியபோது சூர்யகுமார் யாதவுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையும் பயிற்சியும் எடுத்து வந்தார் சூர்யகுமார் யாதவ்.

காயத்திலிருந்து மீண்டு அண்மையில் மும்பை சென்றடைந்தார். ஆனால் 3 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், அதை முடித்துவிட்டு மும்பை அணியுடன் தற்போது இணைந்து உள்ளார். இதனால் அவர் ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com