ஹர்திக்குடன் இணைந்து விளையாடும் போது தோனியின் திட்டத்தை பின்பற்றினேன் - ரவீந்திர ஜடேஜா

ஹர்திக்குடன் இணைந்து விளையாடும் போது தோனியின் திட்டத்தை பின்பற்றியதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.
Photo Credit: AP
Photo Credit: AP
Published on

கான்பெர்ரா,

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும், மிகப்பெரும் ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே அமைந்த பார்ட்னர்ஷிப். இருவரும் ஆறாவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 302 ஆக உயர்த்தினர்.

முதல் 45 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 226 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 76 ரன்கள் குவித்தனர். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தநிலையில், ஹர்திக்குடன் இணைந்து விளையாடும் போது தோனியின் திட்டத்தை பின்பற்றியதாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.

கோப்புப்படம்

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தோனி கொடுத்த சில டிப்ஸ்களே எனது பொறுப்பான ஆட்டத்திற்கு காரணம். தோனி பாய் இந்தியாவுக்காகவும், சென்னை அணிக்காகவும் நிறையை ரன்களை சேர்த்துள்ளார். அவர் கிரீசுக்கு வந்தால் பேட்ஸ்மேன்களுடன் பார்ட்னர்ஷிப் அமைக்கவும், செட்டாகவும் முயற்சி செய்வார். அது தான் அவருடைய பாணி. அதன் மூலம் பெரிய ஷாட்களை கூலாக ஆடி அசத்துவார். அப்படி அவர் பலமுறை விளையாடியதை அவருக்கு பக்கத்தில் இருந்து பேட்ஸ்மேனாக பார்த்தும், அது மாதிரியான சூழலில் அவருடன் விளையாடியும் உள்ளேன். அது போல விளையாடும் போது நிறைய ரன்களை சேர்க்க கடைசி 4 முதல் 5 ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றாலே போதும் என சொல்வார். அதை தான் ஹர்திக் உடனான பார்ட்னர்ஷிப்பில் நான் செய்தேன். இறுதி வரை விளையாடி கடைசி சில ஓவர்களில் ஆன் சைடில் ரன்களை சேர்ப்பது தான் எங்கள் திட்டம். அதை சரியாக செய்தோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com