முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாப் சிம்ப்சன் காலமானார்

பாப் சிம்சன் சிட்னியில் இன்று காலை மரணம் அடைந் தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பாப் சிம்சன் சிட்னியில் இன்று காலை மரணம் அடைந் தார். அவருக்கு 89 வயதாகிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் சகாப்தங்களில் ஒருவரான அவர் 1957 முதல் 1978 வரை 62 டெஸ்டில் விளையாடி 4869 ரன் எடுத்து இருந்தார். 71 விக்கெட் வீழ்த்தி இருந்தார். பாப் சிம்சன் 10 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார் அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 311 ரன்கள் எடுத்தார் .
கேப்டன் பதவியில் 39 டெஸ்டில் 12ல் வெற்றி கிடைத்தது. தேர்வாளராகவும் பணியாற்றி இருந்தார். 965ல் விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதை பெற்று இருந்தார். பாப் சிம்சன் அவரது காலத்தின் சிறந்த ஸ்லிப் பீல்டர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
Related Tags :
Next Story






