உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்

உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்
Published on: 

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.

2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட், சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயன்றது கேமராவில் பதிவானது. இந்தச் சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது.

மீண்டும் வெடித்த சர்ச்சை!

இந்த விவகாரம் சமீபத்தில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கேமரூன் பான்கிராஃப்ட், The West Australian நாளிதழில் எழுதிய கட்டுரையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தை சேதப்படுத்தும் நடவடிக்கை குறித்து அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக, தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கும் இந்த விவகாரம் தெரிந்திருந்ததாக பான்கிராஃப்ட் தனது கட்டுரையில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாட் கம்மின்ஸ் தொடர்ந்து மறுத்து வருகிறார். பான்கிராஃப்ட் பந்தில் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தியதை தான் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

மைக்கேல் கிளார்க் கூறியது என்ன?

இந்த விவகாரம் குறித்து தனது பேசிய மைக்கேல் கிளார்க், உண்மை என்பது ஒன்றுதான்.ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு உண்மைகளைக் கூற முடியாது.

மேலும், இந்த விவகாரத்தில் நடந்த தவறுக்கு ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன் பிறகு நடந்த விஷயங்களும், உண்மையை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும்தான் தற்போது முக்கியமான பிரச்சினையாக உள்ளன.

ரசிகர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த விவகாரத்தில் முழுமையான உண்மை வெளிவர வேண்டும். அப்போதுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் இந்தப் பிரச்சினையிலிருந்து முன்னேற முடியும் என்றும் கிளார்க் கூறியுள்ளார்.

X