ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்


ஆஸ்திரேலிய முன்னாள்  கிரிக்கெட் வீரர் மரணம்
x

image courtesy: twitter/ @CricketAus

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 66 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆன இயன் ரெட்பாத் (வயது 83) வயது மூப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இயன் ரெட்பாத் 1964-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். அந்த கால கட்டங்களில் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 4737 ரன்கள் அடித்துள்ளார். மேலும் 5 ஒருநாள் போட்டிகளும் விளையாடியுள்ளார்.

இவரது மரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story