வங்காளதேச அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்

image courtesy:PTI
இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 59 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்புயல் ஷான் டெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ஆண்ட்ரே ஆடம்சின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் டெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2027 நவம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெய்ட் ஆஸ்திரேலிய அணிக்காக 59 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக இவர் அதிவேகத்தில் பந்துவீசும் திறமை கொண்டவர். இவரது சேர்க்கை நிச்சயம் வங்காளதேச அணிக்கு பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெய்ட் முன்பு பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






