போட்டியின்போது மாரடைப்பு... கர்நாடக முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.எல். அக்‌சய்
Published on

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் கிரிக்கெட் வீரரான எஸ்.எல். அக்‌சய், பெங்களூருவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

39 வயதான அக்சய், சிவமோகாவை சேர்ந்தவர். அவர் பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் நடைபெற்ற மூன்றாம் பிரிவு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Also Read
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்... இலங்கை அணியின் ஒருநாள், டி20 கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமனம்
எஸ்.எல். அக்‌சய்

வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அக்சய், 2011 முதல் 2013 வரை கர்நாடக அணிக்காக 6 முதல்தர (First-Class) போட்டிகள், 3 லிஸ்ட்-ஏ போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com