ஐபிஎல் - சஞ்சு சாம்சன் முதல் ஸ்ரேயாஸ் ஐயர் வரை... 70 லீக் ஆட்டங்கள்... 14 சதங்கள்

இந்த சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.
ஐபிஎல் - சஞ்சு சாம்சன் முதல் ஸ்ரேயாஸ் ஐயர் வரை... 70 லீக் ஆட்டங்கள்... 14 சதங்கள்
Published on

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரின் 70 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிளே-ஆப் சுற்று தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்தை நோக்கி அடுத்த கட்டப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.

இந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், லீக் சுற்று முழுவதும் மொத்தம் 14 சதங்கள் பதிவாகியுள்ளன. அந்த 14 சதங்களை 13 வீரர்கள் அடித்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்களே அதிக சதங்கள் விளாசி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்.

Also Read
ஐபிஎல் - லீக் போட்டிகள் முடிவு... அதிக சிக்ஸர், பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார்?
ஐபிஎல் - சஞ்சு சாம்சன் முதல் ஸ்ரேயாஸ் ஐயர் வரை... 70 லீக் ஆட்டங்கள்... 14 சதங்கள்

சதமடித்த 13 வீரர்களில் 8 பேர் இந்தியர்களாகவும், 5 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

சதமடித்த இந்திய வீரர்கள்:

சஞ்சு சாம்சன்

சாய் சுதர்சன்

கே.எல்.ராகுல்

வைபவ் சூர்யவன்சி

அபிஷேக் சர்மா

விராட் கோலி

ஸ்ரேயாஸ் ஐயர்

திலக் வர்மா

சதமடித்த வெளிநாட்டு வீரர்கள்:

மிட்செல் மார்ஷ்

கூப்பர் கனோலி

ரியான் ரிக்கெல்டன்

பின் ஆலன்

டி காக்

இந்த சீசனில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். அவர் மட்டுமே 2 சதங்கள் விளாசியுள்ள நிலையில், மற்ற 12 வீரர்கள் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

பிளே-ஆப் சுற்றிலும் இந்த நட்சத்திர பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான பார்மை தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்திய வீரர்களின் இந்த அபார பேட்டிங் , ஐபிஎல் 2026 சீசனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com