வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தென்னாப்பிரிக்கா வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தென்னாப்பிரிக்கா வெற்றி
Published on

வங்காள தேச கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. இதையடுத்து 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

இரு அணிக்களுக்கு இடையேயான, முதல் 20 ஓவர் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள புளோயம்போன்டீனில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக்கும், டிவில்லியர்சும் அதிரடியாக விளையாடினர். டி காக் 59 ரன்களும் டிவில்லியர்ஸ் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா, 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியின் சவுமியா சர்க்கார் அதிகப்பட்சமாக 47 ரன்கள் எடுத்தார். முகமது சைபுதீன் 39 ரன்கள் எடுத்தார். டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com