அப்ரிடி ஒரு கோமாளி, இந்தியா வந்து மனநல சிகிச்சை பெற்று செல்லட்டும் - கவுதம் காம்பீர்

அப்ரிடி ஒரு கோமாளி, இந்தியா வந்து மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்லட்டும் என கவுதம் காம்பீர் கூறி உள்ளார்.
அப்ரிடி ஒரு கோமாளி, இந்தியா வந்து மனநல சிகிச்சை பெற்று செல்லட்டும் - கவுதம் காம்பீர்
Published on

புதுடெல்லி,

கேம் சேஞ்சர் என்ற பெயரில் அப்ரிடி சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், 37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல. நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிறந்த தேதி, மாதம் விவரத்தை சொல்லவில்லை. இந்த நாள் வரை கிரிக்இன்போ வீரர்களின் பயோடேட்டாவில் அப்ரிடியின் பிறந்த தேதி 1980-ம் ஆண்டு மார்ச் 1 என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி தான் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கவுதம் கம்பீர் எந்த ஒரு சாதனையும் புரியவில்லை, அவர் மனதில் டான் பிராட்மேன் ஜேம்ஸ்பாண்ட் என்ற நினைப்பு உள்ளது. கம்பீருக்கு மற்ற வீரர்களுடன் முறையாக நடந்து கொள்வதில் பிரச்சனை உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

அப்ரிடியின் விமர்சனத்திற்கு பதிலடி தந்துள்ள கவுதம் கம்பீர், அப்ரிடி ஒரு கோமாளி என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா இலவச விசா அளித்து வருவதாகவும், இங்கு வந்து மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்லுமாறும் கம்பீர் கூறியுள்ளார்.

இது குறித்து பதில் அளித்துள்ள கவுதம் காம்பீர் "அப்ரிடி ஒரு கோமாளி; இந்தியா வந்து மனநலமருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்லட்டும்" என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com