பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு

பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் மாயமானது இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு
Published on

புதுடெல்லி

பா.ஜனதா எம்.பியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரின் தந்தை தீபக் கம்பீர். கடந்த மே 28ம் தேதி தனது வெள்ளை நிற டொயோட்டோ ஃபார்ச்சூனர் காரை டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் பகுதியில் தனது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். காலை எழுந்து பார்த்த பொழுது காரை காணவில்லை. காரை யாரோ திருடி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com