

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாப் படேல், பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் செயல்பாடுகள் குறித்து சில முன்னாள் வீரர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில், முனாப் படேல் இதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். முனாப் படேல் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கினால் இந்திய கிரிக்கெட் பேரழிவை சந்திக்கும். வீரர்களை கையாள்வது மிகவும் சவாலாகி விடும். அவர் நேர்மையான மனிதர். உள்ளதை உள்ளபடி சொல்வார். அது பலருக்கு பிடிக்காது. நிலைமை கைமீறினால், அந்த வீரரை நீக்கும் துணிச்சல் அவருக்கு உண்டு. இதனாலயே அவர் பல எதிரிகளை சம்பாரித்துள்ளார்' இவ்வாறு அவர் கூறினார்.