இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆலசோனை வழங்கிய கவாஸ்கர்

இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆலசோனை வழங்கிய கவாஸ்கர்
Published on

சென்னை,

2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.

இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை வழங் கியுள்ளார். இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகை யில்,

'பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இவ்விரு அணிகளும் ஒரே மாதிரியாக உள்ளன. வெற்றிக ரமாக ஆட்டத்தை முடிக்கும் திறமையான வீரர்களும் இருக்கிறார்கள். இங் கிலாந்து பெற்றுள்ள சில வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடியிருக்கிறார் கள். அவர்கள் இந்திய சூழலை, நன்கு அறிந்தவர்கள். நெருக்கடியான நாக்-அவுட் போட்டிகளிலும் ஆடிய அனுபவம் உண்டு. அதனால் இது சிறப்பு வாய்ந்த ஒரு ஆட்டமாக இருக்கப்போகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) குறைந்தது 2 ஓவர்கள் வீச வேண்டும் என்று நம்புகிறேன். ஏனெனில் ஒரு புதிய பந்து பவுலராக, எதிரணியின் ஜோஸ் பட்லர், பில் சால்ட், ஹாரி புரூக் போன்ற டாப் வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அது அணிக்கு அனுகூலமாக இருக்கும். இதன் மூலம் இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பு கிட்டத்தட்ட உடைந்து விடும்.

ஆனால் பும்ராவை 5-வது ஓவருக்கு பந்து வீச அழைத்தால், முன்னதாக வீசப்பட்ட 4 ஓவர்களில் தொடக்க பேட்ஸ்மேன்கள் 8-10 பந்துகளை சந்தித்து தங்களை நிலைநிறுத்திருப்பார்கள். எனவே முதல் ஓவரை பும்ரா வுக்கு கொடுத்து, தொடக்க விக்கெட்டுகளை சீக்கிரம் சாய்ப்பதே இந்தி யாவுக்கு சாதகமாக இருக்கும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com