

மும்பை,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத் தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் முதல் 4 ஆட்டங்களில் 15 ரன் மட்டுமே எடுத்த அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் (30 பந்து) சேர்த்து ஒரு வழியாக நெருக்கடியில் இருந்து விடுபட்டுள்ளார்.
அவரது இன்னிங்சை பாராட்டி யுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்,
'ஒரு பேட்டராக அபிஷேக் ஷர்மா எப் படி விளையாடுவார் என்பதை நாம் அறிவோம். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசியதன் மூலம் தனது ஆட்டத்திறன் மீது சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தியுள்ளார். தனது இன்னிங்சை தொடங்குவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். ஆப்ஸ்பின் பந்து வீச்சுக்கு மதிப்பு கொடுத்தது டன், ரிஸ்க்கான ஷாட்டுகளுக்கு முயற்சிக்காமல் நிதானமாக விளையாடி னார். அது மட்டுமின்றி அவர் தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தினார். அதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நாம் வழக்கமாக இது போன்ற அபிஷேக் ஷர்மாவை பார்த்திருக்கமாட்டோம். அவர் நிறைய விஷ யங்களை கற்றுக்கொண்டு வருகிறார் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வீர ருக்கும் அடுத்தடுத்த ஆட்டங்களில் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாத சூழல் உருவாகும். அதில் இருந்து நாம் எவ்வளவு கற்றுக் கொண்டு மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம். அபிஷேக் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வது, அவர் முன்னேறி செல்வதற்கான அறிகுறியாகும்' என தெரிவித்தார்.