கில், பட்லர் அதிரடி..குஜராத் அணி 210 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பற்கு குஜராத் 210 ரன்கள் எடுத்தது.
கில், பட்லர் அதிரடி..குஜராத் அணி 210 ரன்கள் குவிப்பு
Published on

புதுடெல்லி,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரி கப்பட்டு மோதுகின்றன.

இந்த தொடரில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர் கொள்கிறது.


இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். குஜராத் அணியில் கில், பட்லர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

கில் 70 ரன்களும், பட்லர் 52 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வாஷிங்க்டன் சுந்தர் நிலைத்து விளையாடி அரைசதம் அடித்தனர்.இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பற்கு குஜராத் 210 ரன்கள் எடுத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com