கில், கேஎல் ராகுல் சதம்...முதல் நாள் முடிவில் இந்திய அணி 368 ரன்கள் குவிப்பு

முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்தது.
கில், கேஎல் ராகுல் சதம்...முதல் நாள் முடிவில் இந்திய அணி 368 ரன்கள் குவிப்பு
Published on

நியூ சண்டிகர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் களமிறங்கி நிலைத்து ஆடி 81 ரன்கள் குவித்தார்.

பின்னர் கில் களமிறங்கினார்.கேஎல் ராகுல் , கில் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினார். குறிப்பாக கேஎல் ராகுல் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார். பின்னர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

கில் நிலைத்து விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ரிஷப் பண்ட் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் பறக்க விட்டார்.கில் சதமடித்தார். ரிஷப் பண்ட் அரைசதமடித்தார்.

இதனால் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்தது. கில் 103 ரன்களும், ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com