கவாஸ்கரின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை தவற விட்ட கில்

சுப்மன் கில் இந்த தொடரில் மொத்தம் 754 ரன்கள் எடுத்துள்ளார்.
கவாஸ்கரின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை தவற விட்ட கில்
Published on

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது இன்னிங்சில் 11 ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்த தொடரில் மொத்தம் 754 ரன்கள் எடுத்துள்ளார்.

இதனால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் கிரகாம் கூச்சை (752 ரன்கள், 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரில்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டான் பிராட்மேன் 810 ரன்களுடன் (1936-ம் அண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில்) முதலிடத்தில் நீடிக்கிறார். சுப்மன் கில் மேலும் 21 ரன்கள் எடுத்து இருந்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கவாஸ்கரிடம் (774 ரன்கள், 1971-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) இருந்து தட்டிப்பறித்து இருக்கலாம். ஆனால் அவர் அந்த அரிய வாய்ப்பை கோட்டை விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com