

ஜெய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கேப்டன் ஜெய்ஸ்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் குஜராத் அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் கில் , சாய் சுதர்சன் இருவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சாய் சுதர்சன் 55 ரன்களும், கில் 84 ரன்களும் எடுத்தனர். பின்னர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.