கோலியின் சாதனையை கில் முறியடிப்பார்- ரவிசாஸ்திரி கணிப்பு

கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில்லுக்கு இருப்பதாக ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
கோலியின் சாதனையை கில் முறியடிப்பார்- ரவிசாஸ்திரி கணிப்பு
Published on

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர், பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 16 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 973 ரன்கள் சேர்த்தார். அவரது சாதனையை முறியடிக்க யாருக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவிசாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு ரவிசாஸ்திரி கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை கோலியின் சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம். ஏனெனில் ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேல் எடுப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இச்சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருந்தால் அது ஒரு தொடக்க ஆட்டக்காரரால் தான் முடியும். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரருக்கு தான் அதிகமான ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் கோலியின் சாதனையை முறியடிக்கும் திறமை குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில்லுக்கு இருப்பதாக கருதுகிறேன். ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர். நல்ல பார்மில் உள்ளார். ஆடுகளங்களும் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன. அவர் அடுத்த 2-3 இன்னிங்சில் தொடச்சியாக 80-100 ரன்கள் வீதம் எடுத்தால், மொத்தம் 300-400 ரன்கள் சேர்த்து விடுவார். தொடக்க ஆட்டக்காரர் கூடுதலாக இரண்டு ஆட்டங்கள் ஆடும் போது, இச்சாதனையை முறியடிக்க சாத்தியம் உண்டு.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

23 வயதான சுப்மன் கில் நடப்பு தொடரில் இதுவரை 3 ஆட்டத்தில் ஆடி 116 ரன்கள் எடுத்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com