விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் கில்

பஞ்சாப் - சிக்கிம் அணிகள் நாளை மோத உள்ளன.
சென்னை ,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் விளையாடினர். டெல்லி அணிக்காக விராட் கோலி, ரிஷப் பண்ட் , மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் கில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் நாளை முதல் விளையாட உள்ளார். பஞ்சாப் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.பஞ்சாப் - சிக்கிம் அணிகள் நாளை மோத உள்ளன.
2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து கில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






